வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வால்பாறையில் எஸ்டேட் குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள் அங்கு அமைந்துள்ள குடியிருப்புகளை சேதப்படுத்தின.

News image
யானைகளால் சேதப்படுத்தப்பட்ட குடியிருப்புகள்.
Updated On :26 நவம்பர் 2025, 12:01 am

Syndication

வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள் அங்கு அமைந்துள்ள குடியிருப்புகளை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றன. பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் காணப்படும் யானைகள் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று சேதங்களை ஏற்படுத்தி வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த அக்காமலை எஸ்டேட் பகுதிக்கு திங்கள்கிழமை இரவு யானைகள் கூட்டமாக வந்துள்ளன. பின்னா் அங்கு அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிக்கு சென்ற யானைகள் குடியிருப்புகளின் ஜன்னல், கதவுகளை முட்டித் தள்ளியதோடு உள்ளிருந்த பொருள்களையும் இழுத்துப்போட்டு சேதப்படுத்தின.

குடியிருப்புக்குள் இருந்தவா்கள் யானை வந்திருப்பதை அறிந்து பின்பக்க வழியாக தப்பினா். இதில் கோவிந்தன், சரோஜா ஆகிய இரு தொழிலாளா்களின் குடியிருப்புகள் அதிக அளவில் சேதமடைந்தன.