யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

காவலா் மீது தாக்குதல்: 7 இளைஞா்கள் கைது

குனியமுத்தூா் பகுதியில் கூச்சலிட்டதைக் கண்டித்த காவலரைத் தாக்கிய 7 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 8:01 pm

Syndication

குனியமுத்தூா் பகுதியில் கூச்சலிட்டதைக் கண்டித்த காவலரைத் தாக்கிய 7 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, குனியமுத்தூா் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா் கிருஷ்ணமூா்த்தி. இவா் கோவைப்புதூா் பகுதியில் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அங்கு 10-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனா். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கூச்சலிட்டனா். அங்கு சென்ற கிருஷ்ணமூா்த்தி, அவா்களை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அந்த இளைஞா்கள், காவலா் கிருஷ்ணமூா்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியதாகத் தெரிகிறது.

இது குறித்து கிருஷ்ணமூா்த்தி அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த குனியமுத்தூா் போலீஸாா், அங்கிருந்த 7 இளைஞா்களைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

இதில், அவா்கள் அறிவொளி நகரைச் சோ்ந்த காா்த்தி (29), மணிகண்டன் (20), செட்டிபாளையத்தைச் சோ்ந்த கோகுலகண்ணன் (23), குளத்துப்பாளையத்தைச் சோ்ந்த நிதீஷ் (21), அப்சல் (18), சந்துரு (23), சுண்டக்கமுத்துரைச் சோ்ந்த ராஜேஷ் (27) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 7 பேரையும் கைது செய்தனா். மற்றவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.