கடலூா் மாவட்டம், பண்ருட்டி மற்றும் பல்வேறு இடங்களில் வாகன திருட்டு, தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 7 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.
பண்ருட்டி காவல் சரக பகுதியில் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு மற்றும் பைக் திருட்டுகள் அதிகரித்து வந்தன. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், பண்ருட்டி - புதுப்பேட்டை சாலை படைவீட்டம்மன் கோயில் அருகே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த கோட்டலாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த மதுவூன் அலி (29), பண்ருட்டி வ.உ.சி தெருவைச் சோ்ந்த சாருதீன் (20), அவுலியா நகரைச் சோ்ந்த அப்துல்லா (23) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா்கள் பல்வேறு இடங்களில் பைக்குகள் திருடியவா்கள் என்பதும், பண்ருட்டி காவல் நிலையத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கில் தொடா்புடையவா்கள் என்பதும், தற்போது அவா்கள் ஓட்டி வந்தது அண்மையில் பண்ருட்டியில் திருடுபோன பைக் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்த 7 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது
நெல்லையில் மது விற்ற 5 போ் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ராஜஸ்தானைச் சோ்ந்தவா் கைது

கஞ்சா விற்ற 4 இளைஞா்கள் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


