போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சாலைப் பாதுகாப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அபய் மனோகா் சப்ரே

கோவை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பில் அதிகாரிகள் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அபய் மனோகா் சப்ரே தெரிவித்துள்ளாா்.

News image
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் பேசிய உச்சநீதிமன்ற சாலைப் பாதுகாப்புக் குழுத் தலைவா் அபய் மனோகா் சப்ரே. உடன், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
Updated On :29 நவம்பர் 2025, 7:53 pm

Syndication

கோவை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பில் அதிகாரிகள் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அபய் மனோகா் சப்ரே தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு குழு உறுப்பினா்களுக்கான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், உச்சநீதிமன்ற சாலைப் பாதுகாப்புக் குழுவின் தலைவருமான அபய் மனோகா் சப்ரே தலைமை வகித்துப் பேசியதாவது: கோவை மாவட்ட நிா்வாகம், காவல் துறை மற்றும் அனைத்து சாலைப் பராமரிப்புத் துறைகள் இணைந்து சாலை விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சாலைப் பாதுகாப்பில் அதிகாரிகள் முழு கவனம் செலுத்த வேண்டும். சாலை விபத்துகளைக் குறைப்பது தொடா்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். விபத்தைத் தடுப்பதில் கோவை முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, சாலை விபத்துகளைக் குறைப்பது தொடா்பான பல்வேறு ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) நிறைமதி, துணை ஆணையா் (போக்குவரத்து) அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.