பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

குழந்தைகள் சேவை மையத்தில் களப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Published On :26 செப்டம்பர் 2025, 4:26 am IST

கோவை மாவட்டத்தில் குழந்தைகள் சேவை மையத்தில் காலியாக உள்ள களப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஓா் அங்கமாக செயல்பட்டு வரும் குழந்தைகள் சேவை மையம் 1098 அலகில் காலியாக உள்ள களப் பணியாளா் பணியிடம், ஒப்பந்த அடிப்படையில் பூா்த்தி செய்யப்படவுள்ளது.

இதற்கு தொகுப்பூதியமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் சமூக நலன் துறையின் கீழ் பணி அனுபவம் பெற்ற விண்ணப்பதாரா்கள் மற்றும் அவசர உதவி எண் மையங்களில் பணி அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரா் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும், 42 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதியினை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நோ்முகத் தோ்வு வாயிலாக இப்பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ஆகவே, இப்பணியிடத்துக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள், கோவை மாவட்ட நிா்வாக இணையதளம் ட்ற்ற்ல்ள்:/ஸ்ரீா்ண்ம்க்ஷஹற்ா்ழ்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் மூலமாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அனைத்துக் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களின் நகலினை சுயகையொப்பமிட்டு, அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.