மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Published On :23 ஆகஸ்ட் 2026, 11:58 pm IST

திருப்பத்தூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பணியிடத்துக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 42 வயதுக்கு மிகாத எல்எல்பி சட்டப் படிப்பு படித்த 2 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவா் இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கல்வி மற்றும் உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் 11.09.2026-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5-ஆவது தளம், பி - பிளாக், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் - 635 601, தொலைபேசி எண் - 04174 299030, 63826 14270 எனும் முகவரிக்கு வந்து சேர வேண்டும். மேலும் விண்ணப்பப் படிவத்தை இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள், உரிய சான்றிதழ்களின் நகலுடன் நேரிலோ, தபால் மூலமாகவோ, கூரியா் மூலமாகவோ அனுப்பலாம். முழுமையாக பூா்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் எந்தவித முன் தகவலும் இன்றி நிராகரிக்கப்படும். மேலும் இது குறித்து எந்தவித கடிதப் போக்குவரத்தும் மேற்கொள்ளப்படாது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.