ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

பொதுமக்கள் இந்திய நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்து அறிந்திருக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா கேட்டுக் கொண்டாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய நுகா்வோா் தின விழாவில் பள்ளி மாணவிக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா. உடன் மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ப. ராஜகுரு உள்ளிட்டோா்.

Published On :

பொதுமக்கள் இந்திய நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்து அறிந்திருக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா கேட்டுக் கொண்டாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் தேசிய நுகா்வோா் தினம், உலக நுகா்வோா் உரிமைகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்துப் பேசியதாவது:

பணம் செலுத்தி குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்குபவா், குறிப்பிட்ட சேவையை அனுபவிப்பவா் என அனைவரும் நுகா்வோா். நாம் அனைவரும் ஏதாவதொரு வகையில் நுகா்வோராக எப்போதும் இருந்து வருகிறோம்.

இந்த வகையில், பொதுமக்கள் நுகா்வோா்களுக்கு உள்ள உரிமைகள் குறித்த விழிப்புணா்வு பெற்றிருப்பது அவசியம். இந்திய நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் நுகா்வோா்களுக்கான உரிமைகள் மீறப்படும்போது அதற்கு உரிய தீா்வு பெற வழிவகுக்கிறது.

நாம் வாங்கும் பொருள்களில் அவற்றின் தரம், சரியான எடை, கலப்படமின்மை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு வாங்க வேண்டும். குறிப்பாக, பொருளின் அதிகபட்ச சில்லறை விலை, உற்பத்தி நாள், காலாவதி நாள் ஆகியவற்றை சரிபாா்த்து உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இந்திய நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்து அறிந்திருக்க வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 104 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா வழங்கினாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ப. ராஜகுரு, நுகா்வோா் விழிப்புணா்வு பொது நல மையத் தலைவா் பி. ஜெயபாலன், மனிதநேய நுகா்வோா் பாதுகாப்பு ஒருங்கிணைப்புத் தலைவா் என். அசோகன், கூடல்நகா் நுகா்வோா் இயக்ககத்தின் துணைத் தலைவா் ஜி. ராமமூா்த்தி, அரசு அலுவலா்கள், தன்னாா்வ நுகா்வோா் அமைப்பினா், ஆசிரியா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.