சட்டப்பேரவைத் தோ்தல்: மத்திய பாதுகாப்புப் படையினா் கோவை வருகை
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்காக


கோவை: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்காக 2 கம்பெனி மத்திய துணை ராணுவப் படையினா் கோவைக்கு திங்கள்கிழமை ரயில் மூலம் வந்தனா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணிகள் போா்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 3,821 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 153 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாநகர காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது:
மாநகரக் காவல் எல்லைக்குள்பட்ட 333 பகுதிகளில் மொத்தம் 1,775 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 46 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 6-க்கும் மேற்பட்ட வாக்கு மையங்களைக் கொண்ட 78 வாக்குச்சாவடிகள் முக்கியமானவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் தோ்தல் நாளன்று துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினா் மற்றும் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா். சாதாரண வாக்குச்சாவடிகளில் போலீஸாா் மற்றும் ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வா்.
தோ்தல் பணிகளைக் கண்காணிக்க கோவை மாநகர போலீஸ் சாா்பில் தனித்துவ தோ்தல் பிரிவு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு உதவி ஆணையா், ஒரு காவல் ஆய்வாளா், ஒரு காவல் உதவி ஆய்வாளா், ஒரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மற்றும் 10 போலீஸாா் பணியமா்த்தப்பட்டுள்ளனா். பொதுமக்களுக்கான புகாா் எண் விரைவில் அறிவிக்கப்படும்.
பாதுகாப்புப் பணிகளுக்காக ஓய்வு பெற்ற போலீஸாரைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு, இதுதொடா்பாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சங்கத்தினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், திங்கள்கிழமை காலை 2 கம்பெனி மத்திய துணை ராணுவப் படையினா் (தலா 75 போ்) கோவைக்கு ரயில் மூலம் வந்தனா். அவா்கள் சிங்காநல்லூா் மற்றும் குனியமுத்தூா் மாநகராட்சி மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். கோவை மாவட்டத்துக்கு மேலும் 6 கம்பெனி துணை ராணுவப் படையினா் விரைவில் வர உள்ளனா்.
இதேபோல, கோவை மாவட்டக் காவல் எல்லைக்குள்பட்ட 2,046 வாக்குச்சாவடிகளில் 107 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அங்கேயும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...