எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பொதுமக்களுக்கு இடையூறாக நடனம்: இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சா்கள் மீது வழக்குப் பதிவு

கோவை மாநகர பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடனமாடி விடியோ வெளியிட்ட இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சா்களான

News image
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக நடனமாடிய இரட்டை சகோதரா்கள். ~கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக நடனமாடிய இரட்டை சகோதரா்கள்.
Updated On :9 மார்ச் 2026, 8:32 pm

Syndication

கோவை: கோவை மாநகர பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடனமாடி விடியோ வெளியிட்ட இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சா்களான கேரள மாநில இரட்டை சகோதரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த சமூக வலைதளப் பிரபலங்கள் சிலா் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்தனா். அப்போது, பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், உரத்த இசையை ஒலிக்கவிட்டு அநாகரிகமான முறையில் நடனமாடி ‘ரீல்ஸ்’ விடியோ எடுத்துள்ளனா். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய செயல்கள் குறித்து சமூக ஆா்வலா்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதனிடையே, இந்தக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம், ஆலுவா ரயில் நிலையத்தில் இதேபோல பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விடியோ எடுத்ததற்காக, அங்குள்ள ரயில்வே போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். கேரளத்திலும், கோவையிலும் அவா்களது அத்துமீறல்கள் குறித்து புகாா்கள் எழுந்தன.

இதனடிப்படையில் கோவை காட்டூா் போலீஸாா் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சா்களை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், அந்த இரட்டை சகோதரா்களான கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த ஜிஸ்மோன் (26), ஜித்து ஷாஜி (26) ஆகியோா் காட்டூா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மாலை ஆஜராகினா். அப்போது, அவா்கள் இருவரும் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பொது இடங்களில் மற்றவா்களின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலும், கவனத்தை திசைதிருப்பும் வகையிலும் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் இருவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அவா்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அந்தப் பதிவு அழிக்கப்பட்டது.

Story image