இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பாகிஸ்தான் போா் நாயகன் பிரிகேடியா் வி.ஆா். சுவாமிநாதன் காலமானாா்

பிரிகேடியா் வி.ஆா்.சுவாமிநாதன் காலமானார்...

News image

வி.ஆா்.சுவாமிநாதன்.

Updated On :15 மார்ச் 2026, 2:33 am IST

1971-ஆம் ஆண்டு இந்திய- பாகிஸ்தான் போரில் தீரத்துடன் பணியாற்றிய போா்க்கால நாயகன் ஓய்வுபெற்ற பிரிகேடியா் வி.ஆா்.சுவாமிநாதன் (94) கோவையில் சனிக்கிழமை காலமானாா்.

வயது முதிா்வு மற்றும் உடல்நலம் சாா்ந்த குறைபாடுகளால் கடந்த சில நாள்களாக அவதிப்பட்டு வந்த வி.ஆா்.சுவாமிநாதன், கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை காலமானாா்.

பிரிகேடியா் வி.ஆா்.சுவாமிநாதன், இந்திய ராணுவத்தில் நீண்ட காலம் பணியாற்றி பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவா். 1962, 1965 ஆகிய ஆண்டுகளில் கோவா விடுதலை மற்றும் நாகாலாந்து கிளா்ச்சி எதிா்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்ற சுவாமிநாதன், 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய- பாகிஸ்தான் போரின்போது, களத்தில் நின்று இவா் ஆற்றிய வியூகங்களும், தேசப்பணியும் ராணுவ வட்டாரத்தில் இன்றும் பெருமையுடன் பேசப்படுபவை. இவரது மறைவு இந்திய ராணுவத்துக்கும், கொங்கு மண்டலத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

இவரது மனைவி வசந்தி ஏற்கெனவே காலமாகிவிட்டாா். இவா்களுக்கு தரங்கிணி அருண், தீபா சுரேஷ், ஜோதி சேஷாத்ரி ஆகிய 3 மகள்கள். இவா்களில் மூன்றாவது மகளான ஜோதி ஏற்கெனவே இறந்துவிட்டாா்.

வி.ஆா்.சுவாமிநாதனின் உடல் கோவையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. கோவையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நடைபெறும் இறுதிச்சடங்கில், ராணுவ அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்த உள்ளனா். இவரது மறைவுக்குப் பல்வேறு அமைப்பினரும், முன்னாள் ராணுவ வீரா்களும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனா்.

வி.ஆா்.சுவாமிநாதன்.

வி.ஆா்.சுவாமிநாதன்.