விஜய்யுடன் தலைமைச் செயலர், டிஜிபி ஆலோசனை!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!
/

வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் மு.கருணாகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On :7 அக்டோபர் 2013, 9:53 am IST

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் மு.கருணாகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
 கோவை மாவட்டத்தில் 908 மையங்களில் உள்ள 2,462 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இச்சிறப்பு முகாம் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.கருணாகரன் திடீர் ஆய்வு செய்தார்.
 கோவை, வேலாண்டிபாளையம், கோவில்மேடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, பேரூர் அரசு நடுநிலைப்பள்ளி, சுண்டக்காமுத்தூர் ஆரசு துவக்கப் பள்ளி ஆகிய மையங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
 அப்போது, பெயர் சேர்த்தலுக்கான படிவம் 6, பெயர் நீக்கலுக்கான படிவம் 7, பதிவுகள் திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே தொகுதிக்குள் இடம் மாறியவர்களுக்கு முகவரி மாற்றம் படிவம் 8-ஏ ஆகிய படிவங்கள் பெறப்பட்டுள்ள விபரங்களை ஆய்வு செய்தார்.
 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் பணியில் உள்ளனரா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பணியில் இல்லாத அலுவலர்களின் மீது தேர்தல் ஆணைய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
 இத்துடன் அக்டோபர் 20, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் அனைவரும் முழுமையாக பணியில் இருந்து மக்களிடம் விண்ணப்பங்களைப் பெற வேண்டும்.
 சிறப்பு முகாம் நடைபெறும்போது பணியாளர்கள் வருகை ஆய்வு செய்யப்படும். வராதவர்கள் மீது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உள்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.