ஆனைகட்டியில் கைவிடப்பட்ட சமுதாயக்கூட கட்டுமானப் பணி

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஆனைகட்டியில் முந்தைய கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்ட ஆதிவாசிகளுக்கான சமுதாயக்கூடக் கட்டுமானப் பணிகள் பாதியில் கைவிடப்பட்டதால், அக்கட்டடம் கேட்பாரற்றுக் கிடக்கிறது.

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஆனைகட்டியில் முந்தைய கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்ட ஆதிவாசிகளுக்கான சமுதாயக்கூடக் கட்டுமானப் பணிகள் பாதியில் கைவிடப்பட்டதால், அக்கட்டடம் கேட்பாரற்றுக் கிடக்கிறது.

ஆனைகட்டியில் கே.கே.நகரில் 50-க்கு மேற்பட்ட ஆதிவாசிக் குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்கள், கூடனூர், வடக்காலூர், ஆனைகட்டி பகுதிகளில் வசிக்கும் மக்களின் சமுதாய நிகழ்வுகளுக்காக சமுதாயக்கூடம் தேவை என்று, அப்போதைய கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அவரும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சத்தை ஒதுக்கினார். இதனைக் கட்ட பெ.நா.பாளையம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஓர் ஒப்பந்ததாரருக்கு இப்பணியை ஒதுக்கியது. அவர் இதனைக் கட்டிவந்த நிலையில், ஒதுக்கப்பட்ட நிதி போதவில்லை என்று கூறி, கடந்த 6 மாதத்திற்கு முன் பாதியிலேயே பணிகளைக் கைவிட்டுச் சென்று விட்டார்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் பலனில்லை. இதற்கிடையே இப்பணிகளை தொடங்க 24 வீரபாண்டி ஊராட்சி நிர்வாகத்தினரும் பலமுறை முயன்றனர். ஆனால் இதுவரை பணிகளைத் தொடர்வதற்கான எவ்வித அறிகுறிகளும் தென்படவில்லை.

இதுகுறித்து ஊராட்சித் தலைவர் சசிமதன் கூறியது.

ஊராட்சி நிர்வாகம் இப்பணியை விரைந்து முடிப்பதற்கான தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஒன்றிய அதிகாரிகளை அணுகி மீண்டும் கேட்க உள்ளோம் என்றார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்களைக் கேட்டபோது, இக்கட்டடப் பணியை முடிக்க கூடுதல் நிதி கேட்டு ஒப்பந்ததாரர் கோரிக்கை விடுத்துள்ளார். பணிகளின் தற்போதைய நிலையை ஆய்வு செய்து தக்க முடிவுகள் எடுக்கப்படும் என்றனர்.

இதுசம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் என்.பாலமூர்த்தியைக் கேட்டபோது அவர் கூறியது: சம்பந்தப்பட்ட ஒன்றியப் பொறியாளரே இக்கட்டுமானப் பணிக்கான முழுமையான திட்ட மதிப்பீட்டை இறுதி செய்து சமர்ப்பித்த அடிப்படையில் தான், பி.ஆர்.நடராஜன் மாவட்ட ஆட்சியர் மூலம் நிதி ஒதுக்கினார்.

ஆனால் இப்போது நிதி போதவில்லை என்று கூறுகின்றனர். நிதிப் பயன்பாட்டில் முறைகேடு நடந்துள்ளது. ஆகவே இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்க உள்ளோம் என்றார்.

எது எப்படியோ, பாதியில் நிற்கும் சமுதாயக்கூடப் பணிகளால் பாதிக்கப்பட்டிருப்பது அப்பாவி ஆதிவாசிகள் தான். மாவட்ட ஆட்சியர் இதில் சிறப்புக் கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com