முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி! மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு! மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை: விசிலடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

அரசு மருத்துவமனை வளாகத்தில்  சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை: ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாலைகளைச் சீரமைக்க பொதுப்பணித் துறைக்கு மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

Published On :

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாலைகளைச் சீரமைக்க பொதுப்பணித் துறைக்கு மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

 கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நோயாளிகள் பதிவு அறை, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, பச்சிளங் குழந்தைகள் பிரிவு, பொதுமருத்துவப் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

 இதையடுத்து அவர் கூறியதாவது:

 மருத்துவமனைப் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், மருத்துவமனை வளாகச் சாலைகளை சீரமைத்து மழைக் காலங்களில் மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்காதவாறு சாலைகள் அமைக்கவும் பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 அதேபோல, தண்ணீர் கசியும் இடங்களைச் சீரமைக்குமாறும், சாக்கடைகளில் தடையின்றி கழிவுநீர் செல்லுமாறு சரி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 மருத்துவமனையின் தரம், சுற்றுப்புறச் சுகாதாரத்தை தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக மேம்படுத்தவும், அனைத்துப் பிரிவுகளிலும் பெயர்ப் பலகைகள் தெளிவாகவும், நோயளிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும் வைக்கவும், வழிகாட்டி அலுவலர்களை நியமித்து நோயாளிகளுக்கு உரிய விவரங்களை தெளிவாக தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

 இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் எட்வின்ஜோ, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் எம்.பழனிசாமி, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.