முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் மீது புகார்

போலீஸ் என்று கூறி பொதுமக்களை மிரட்டி வருவதாக ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர் மீது மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

Updated On :

போலீஸ் என்று கூறி பொதுமக்களை மிரட்டி வருவதாக ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர் மீது மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

கோவை, காந்திபுரம், சாஸ்திரி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கோவை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி (எ) மனோஜ் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் கதிரவன் (எ) ஸ்டீபன் திமுகவைச் சேர்ந்தவர். இந்நிலையில், ஊர்க்காவல் படை வீரராக உள்ள முத்துசாமி, தன்னை போலீஸ் என்று கூறி எங்கள் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை மிரட்டி வருகிறார்.

மேலும், எங்கள் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை திமுகவில் சேருமாறும், வேறு எந்த கட்சியிலும் சேரக்கூடாது என்றும், மீறினால் போலீஸில் பொய்ப் புகார் தெரிவித்து வழக்குகளில் சிக்க வைத்துவிடுவேன் என்றும் மிரட்டுகிறார்.

இவ்வாறு முத்துசாமி தன் சுயலாபத்துக்காக எங்களது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது மட்டுமின்றி, சொந்த விருப்பு, வெறுப்புகளை வைத்து அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.