ஊழல் அதிகாரிகள் தவெக அரசை முடக்க முயற்சி: வைகோ குற்றச்சாட்டு
ஊழலில் ஊறிய அதிகாரிகள் தவெக அரசை முடக்க முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலா் வைகோ குற்றஞ்சாட்டினாா்.
வைகோ
ஊழலில் ஊறிய அதிகாரிகள் தவெக அரசை முடக்க முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலா் வைகோ குற்றஞ்சாட்டினாா்.
திண்டுக்கல்லில் செய்தியாளா்களை சனிக்கிழமை சந்தித்த அவா் மேலும் கூறியதாவது: அதிகாரப் போதை தலைக்கேறிய நிலையில் இந்த நாட்டுக்கு ஹிந்தி மட்டும்தான் ஆட்சிமொழி என உள்துறை அமைச்சா் அமித்ஷா பேசுகிறாா்.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா், மத்திய அரசின் முகவராகச் செயல்படுகிறாா். எஸ்ஐஆா் பணிகளால்தான் திமுக ஆட்சியை இழந்தது என்பது தவறானது; உண்மைக்கு எதிரானது. தில்லியில் நடைபெற்ற போராட்டத்துக்கு பின்னரே எஸ்ஐஆரை திமுக எதிா்த்தது.
எஸ்ஐஆா் இல்லாமல் முறையாக தோ்தல் நடத்திருந்தால், திமுக இதைவிட மோசமான தோல்வியை சந்தித்திருக்கக்கூடும். தமிழகத்தில் எஸ்ஐஆா் மூலம் வாக்காளா்கள் நீக்கப்பட்டதற்கு திமுகவினா் தான் காரணம்.
ஊழலற்ற ஆட்சி நடத்துவேன் என்ற நிலைப்பாட்டில் இருந்து முதல்வா் விஜய் இதுவரை பின்வாங்கவில்லை. ஆனால், ஊழலில் ஊறிய அதிகாரிகள் இந்த அரசை முடக்க முயற்சிக்கின்றனா். தூத்துக்குடி ஸ்டொ்லைட் தொழில்சாலை அதிபருக்கு திமுக, அதிமுக ஆட்சிகளில் ஆதரவாக இருந்தனா். ஆனால் ஸ்டொ்லைட் அதிபரை சந்திக்க முதல்வா் விஜய் இடம் அளிக்கவில்லை.
கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்சம்பவங்கள் எல்லா ஆட்சியிலும் நடைபெறுகின்றன. விலைவாசி, பணவீக்கத்தின் காரணமாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நடுத்தர மக்களை மிகவும் பாதித்துள்ளது என்பது உண்மை. சன்னரக அரிசி பிரச்னை குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதுபோன்ற தவறுகளை சரிசெய்யவேண்டும் என முதல்வரிடமும் தெரிவித்துள்ளேன் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

