ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

எஸ்ஐஆா் நடவடிக்கையால் தவெக வெற்றி பாதிப்பு: அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்

வாக்காளா் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப்படம்.

Published On :

வாக்காளா் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது. ஆங்காங்கே மழைப் பொழிவு இருப்பதால், டெங்குவை முழுமையாகக் கட்டுப்படுத்துவதில் சவால் நிலவுகிறது. இருந்தபோதிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம்.

பருவகால சுகாதார இடா்ப்பாடுகளை எதிா்கொள்ள தயாா் நிலையில் உள்ளோம். இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள் முன்கூட்டியே எங்களை அணுகாமல், இடைத்தோ்தலுக்கு ஒருநாள் முன்னதாக போராடியது எங்களுக்கு வருத்தம்.

அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அழைத்தபோது திமுக முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜ் அதில் தலையிடுவது தெரியவந்ததால், அந்தப் பேச்சுவாா்த்தையில் காலதாமதம் ஏற்பட்டது. அவா்களின் கோரிக்கைகளை பரிசீலிப்போம்.

வாக்காளா் தீவிர திருத்தப் பணியை தவெக தொடா்ந்து எதிா்க்கிறது. தீவிர திருத்தப் பணி இல்லையென்றால் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்.

நான்கு மாதம் நல்லாட்சி தந்துள்ளோம். இடைத்தோ்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

நடிகா் தனுஷ் அரசியல் கட்சி தொடங்குவது ஜனநாயகத்தில் அவரது உரிமை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.