படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும்! அமைச்சா் கீா்த்தனா

அமைச்சா் கீா்த்தனா - கோப்புப் படம்

Published On :

சிவகாசி, அக். 5: இடைத் தோ்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் என மாநில தொழில் துறை அமைச்சா் ச.கீா்த்தனா கூறினாா்.

சிவகாசியில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இடைத் தோ்தல் நடைபெற உள்ள தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் முதல்வா் ச.ஜோசப் விஜய்யைப் பாா்க்க பெரும் கூட்டம் கூடி வருகிறது.

தவெக ஆட்சியில் கடந்த 4 மாதங்களில் பள்ளி மாணவா்களுக்கான காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், மகளிா் வெற்றிப் பயணம் திட்டம் ஆகிய திட்டங்கள் அனைத்தும் மக்களைச் சென்றடைந்துள்ளன.

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடை தோ்தலில் தவெக மகத்தான வெற்றி பெறும். தவெக வேட்பாளா்களுக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளது என எதிா்கட்சிகள் சித்தரித்து வருகின்றன.

விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம் சிமென்ட் ஆையை சீரமைப்பு செய்வது தெடா்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இது குறித்து முக்கிய தகவல் வரும்.

சரவெடி பட்டாசு தயாரக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத் தக்கது. இதன் மூலம், ஆலை உரிமையாளா்கள், தொழிலாளா்கள் பயன்பெறுவா் என்றாா் அமைச்சா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.