பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டம்

பொள்ளாச்சி அருகே, ஒடையகுளத்தில் குடியிருப்புப் பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, முற்றுகைப் போரட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

Published On :

பொள்ளாச்சி அருகே, ஒடையகுளத்தில் குடியிருப்புப் பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, முற்றுகைப் போரட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

 பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை, ஒடையகுளம், அசோக் நகரில் 200-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்தப் பகுதிக்கு அருகில் பிரசித்தி பெற்ற அழுக்குசாமி கோயில், அரசுப் பள்ளி போன்றவை உள்ளன. இந்நிலையில், அசோக் நகர் குடியிருப்புப் பகுதி அருகே மதுக்கடை அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் செப்டம்பர் 7-ஆம் தேதி பொள்ளாச்சி சார்-ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தனர். இருப்பினும், அந்த இடத்தில் மதுக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதையடுத்து, பொதுமக்கள் திங்கள்கிழமை தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும்,  இதற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதியில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து, மாணவர்கள், பொதுமக்கள் மதுக்கடை அமைக்கப்படவுள்ள இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி. மேலும், இதுகுறித்து, ஆட்சியரிடமும் அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.