ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கக்கோரி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கோவையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :

திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கக்கோரி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கோவையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் செயலர் வே.வசந்தகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் பி.ஆர்.வேலு, துணைத் தலைவர்கள் கே.சி.மூர்த்தி, பி.கீர்த்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், இளைஞர் பெருமன்றத் தலைவர் மு.வ.கல்யாணசுந்தரம் கண்டன உரையாற்றினார். அவர் பேசுகையிஸ், தமிழகத்தில் அரசு ஊழியர்கள், காவல்துறையில் பணியாற்றுவோரை சுதந்திரமாகப் பணியாற்ற அரசு அனுமதிக்க வேண்டும். காவலர்களின் குறைகளை முறையிட்டுத் தீர்வு காண, நீதிபதி தலைமையில் தனி அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் பெருமன்றத் துணைச் செயலர் என்.கணேசமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.