சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

அறிவிக்கப்படாத மின்வெட்டு: பொள்ளாச்சி மின்வாரிய அலுவலகம் முற்றுகை

பொள்ளாச்சி அமைதி நகர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.

Updated On :

பொள்ளாச்சி அமைதி நகர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி, 35-ஆவது வார்டு, அமைதிநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பலமுறை முன்னறிவிப்பு இன்றி மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அமைதி நகர் பகுதி மக்கள் உடுமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். அவர்களிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதேபோல, பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி பகுதியில் கடந்த சில நாள்களாக முன்னறிவிப்பு இல்லாமல் தொடர்ந்து பலமுறை மின்நிறுத்தம் செய்யபடுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி - ஆழியாறு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.