
பொள்ளாச்சியில் அரசு நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் கோரிக்கை
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் கந்தசாமி ஆகியோர் பேசுகையில், "கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோவை குற்றாலம் - சிங்கபதி கிராமம் வரையிலான பகுதியில் பாசனத் தேவை, குடிநீர் தேவைக்காக புதிய தடுப்பணை கட்டவேண்டும். மேலும், அப்பகுதியில் உள்ள சிறிய அருவிகளில் மின்திட்டங்கள் அமைக்க முடியுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யலாம்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் நெல் விளைச்சல் அதிகம் உள்ளது. ஆனால், கோவை, கணபதி பகுதியில்தான் அரசின் கொள்முதல் நிலையம் உள்ளது. எனவே, பொள்ளாச்சி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழகத்தில் பெரும்பான்மையினராக உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கோவை, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வட்டாட்சியர்களுக்கான குடியிருப்பு கட்ட முயற்சி நடைபெறுகிறது. அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் சுமார் 300 ஆண்டுகளாக ஒரு கோயில் உள்ளது. கட்டுமானப் பணிக்காக அந்தக் கோயில் இடிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதால் குடியிருப்புகள் கட்ட வேறு இடத்தில் நிலம் தேர்வு செய்ய வேண்டும்' என்றனர்.
இக்கூட்டத்தில், வருவாய்க் கோட்டாச்சியர் மதுராந்தகி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






