அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

10 ஆயிரம் பெட்ரோல் விற்பனை: நிலையங்கள் தானியங்கி மயமாக்கம்: இந்தியன் ஆயில் தலைவர் அறிவிப்பு

நாடு முழுவதிலும் 10 ஆயிரம் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தானியங்கி மயமாக்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் பி.அசோக் தெரிவித்துள்ளார்.

Updated On :

நாடு முழுவதிலும் 10 ஆயிரம் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தானியங்கி மயமாக்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் பி.அசோக் தெரிவித்துள்ளார்.

 கோவை, திருப்பூர் நகரங்களில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 53 சில்லறை விற்பனை நிலையங்கள் முற்றிலும் தானியங்கி முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த மையங்களின் தொடக்க விழா கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 தமிழ்நாடு, புதுவை மாநில இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநர் யு.வி.மன்னூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தலைமை அலுவலக செயல் இயக்குநர்கள் டி.கே.சர்மா (சில்லறை விற்பனை), ஜி.ராம்குமார் (தானியங்கி முறை), பொது மேலாளர் எம்.டி.குமார் (சில்லறை துறை வளர்ச்சி) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 இந்நிகழ்ச்சியில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனையைத் தொடங்கி வைத்து இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் அசோக் பேசியது:

 தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஆயில் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியே பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் தானியங்கி மயமாக்கல் முறை. இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும், விநியோகஸ்தர்கள, நிறுவனத்தின் பணிகளை எளிமையாக்கும் விதமாகவும் அமையும். நாட்டிலேயே 39-ஆவதாகவும், தமிழகத்தில் முதலாவதாகவும் கோவை, திருப்பூரில் உள்ள 53 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தானியங்கி மயமாக்கப்பட்டுள்ளன. இங்கு பெட்ரோல் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விவரங்கள் அடங்கிய ரசீது வழங்கப்படும். எங்களுக்கு நாடு முழுவதிலும் சுமார் 25 ஆயிரம் சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ள நிலையில், இதுவரை சுமார் 8,800 நிலையங்கள் தானியங்கி மயமாக்கப்பட்டுள்ளன.

 2016 மார்ச் மாதத்துக்குள் 10 ஆயிரம் விற்பனை நிலையங்கள் தானியங்கி மயமாக்கப்படும். தமிழகத்தில் கோவையைத் தொடர்ந்து சென்னை, திருச்சி, மதுரை, சேலம் நகரங்களில் இது அமல்படுத்தப்படும். நெல்லையில் 16 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட எரிவாயு சேமிப்பு நிலையத்தை தொடங்க உள்ளோம். சேலத்தில் உள்ள எரிவாயு நிரப்பும் நிலையத்தை நவீன மயமாக்க உள்ளோம்.

 கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்தாலும் வரிகள், போக்குவரத்து செலவினங்கள் உள்ளிட்ட நிலையான காரணிகள் காரணமாக பெட்ரோல் விலையை குறைக்க முடிவதில்லை. வாடிக்கையாளர்களின் வசதிக்காக செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

 மேலும், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கழிப்பிடம், குடிநீர் வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.