வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

காய்ச்சல் அறிகுறி: சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை

காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவக்கூடிய அறிகுறி இருப்பதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :

காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவக்கூடிய அறிகுறி இருப்பதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பிரவீன் கூறியதாவது:

வால்பாறை வட்டாரத்தில் சமீபகாலமாக காலநிலை அடிக்கடி மாறி வருகிறது. மழை, வெயில் என மாறி, மாறி வரும் காலநிலை மாற்றத்தால் குடிநீரின் தன்மையும் மாற வாய்ப்புள்ளது. மேலும், இங்கு வசிப்பவர்கள் பல்வேறு ஊர்களுக்குச் சென்று திரும்புபோது, காய்ச்சல் ஏற்பட்டு, அந்தக் காய்ச்சல் இங்கு வசிப்பவர்களுக்கும் பரவிவிடுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் குடிநீரைக் காய்ச்சிக் குடிக்கவேண்டும்.

குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வதால், கொசு மூலமாகப் பரவும் காய்ச்சலைத் தடுக்கலாம்.

இதேபோல, வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து உணவகங்கள், பேக்கரிகளில் பொதுமக்களுக்கு கட்டாயம் சுடு தண்ணீர், சுகாதாரமான, தரமான உணவுப் பண்டங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அதுகுறித்து விரைவில் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.