புரட்டாசி சனிக்கிழமை: கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையையொட்டி, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையையொட்டி, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பிரசித்தி பெற்ற பாலமலை ரங்கநாதர் திருக்கோயிலில் யாக வேள்விகள் நடத்தப்பட்டு பெருமாள் வெண்பட்டு உடுத்தி சேவை சாதித்தார். திருமலைநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் காலை நடை திறக்கப்பட்டு அபிஷேக பூஜை நடத்தப்பட்டது. பின்னர் பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாயக்கன்பாளையம், இடிகரையில் உள்ள பள்ளி கொண்ட ரங்கநாதர் கோயிலில் நாம சங்கீர்த்தன பஜனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோயில், பழைய புதூர் ஆதிமூர்த்தி பெருமாள் கோயில், நாயக்கனூர் நரசிங்கப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

