வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அரசுப் பள்ளிகளில் சுகாதாரக் குழுவினர் ஆய்வு

கோவை அருகே, கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சுகாதாரக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:21 am

DIN

கோவை அருகே, கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சுகாதாரக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்கு உள்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும் டெங்கு உருவாகும் வாய்ப்புகளைத் தடுக்கும் வகையில் புதன்கிழமை முதல் 6 சுகாதாரக் குழுக்கள்ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. டெங்கு பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் புதன்கிழமை முதல் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் ஆய்வு மேற்கொள்ள 6 குழுக்கள்அமைக்கப்பட்டன.
இக்குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில்  தங்கள் ஆய்வைத் தொடங்கினர். கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு வந்த ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஜாஸ்மின், எம்.பாண்டியன், டெய்ஸி, கே.முனியாண்டி ஆகியோர் வளாகத்தைச் சுற்றி ஆய்வு செய்து, தண்ணீர் தேங்கி நிற்கும்  வகையில் இருந்த பொருள்களை அகற்ற அறிவுறுத்தினர்.
இன்னும் இரண்டு நாள்களில்  ஆய்வை நிறைவுசெய்து, அதுதொடர்பான அறிக்கை முதன்மைக் கல்வி அதிகாரியிடம்  வழங்கப்படும் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.