ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் சாவு

பொள்ளாச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் புதன்கிழமை உயிரிழந்தனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:19 am

DIN

பொள்ளாச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் புதன்கிழமை உயிரிழந்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த தொண்டாமுத்தூரைச் சேர்ந்தவர் செல்லமுத்து (27). கூலித் தொழிலாளி. இவர், உடுமலையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சங்கீதா என்ற பெண்ணை அழைத்துக்கொண்டு புதன்கிழமை இரவு பொள்ளாச்சி சாலையில் சென்றுகொண்டிருந்தார். நல்லாம்பள்ளி பிரிவு அருகே முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்றபோது எதிரே வந்த ஜீப் இருசக்கர வாகனத்தின்மீது மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.  
இதில், நிலைதடுமாறிக் கீழே விழுந்த செல்லமுத்துவும், சங்கீதாவும் லாரியின் பின்புறச் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆனால், லாரி ஓட்டுநர் நிற்காமல் சென்றுவிட்டார். சம்பவ இடத்துக்குச் சென்ற கோமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.