அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

என்டிசி பஞ்சாலைக் கழக  ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

தேசிய பஞ்சாலைக் கழகத்தின் கீழ் (என்டிசி) உள்ள பஞ்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு  ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :16 நவம்பர் 2017, 10:29 pm

DIN

தேசிய பஞ்சாலைக் கழகத்தின் கீழ் (என்டிசி) உள்ள பஞ்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு  ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 
 மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தேசிய பஞ்சாலைக் கழகத்துக்குச் சொந்தமாக தென் மண்டலத்தில் என்டிசி, தமிழகம், கேரளம், புதுச்சேரி, மாஹே, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் எஸ்ஆர்ஓ பஞ்சாலைகள் இயங்கி வருகின்றன. 
இந்த ஆலைகளில் பணிபுரியம் ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் 2014-ஆம் ஆண்டு காலாவதியானது. இந்த நிலையில், கொச்சியில் உள்ள துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் சார்பில் புதன்கிழமை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
 இதில், கோவை முருகன் மில்ஸ், ஸ்ரீ ரங்கவிலாஸ் மில்ஸ், பங்கஜா மில்ஸ், சி.எஸ்.டபிள்யூ மில்ஸ் உள்ளிட்ட 13 ஆலைகளில் ஸ்டாப் ஆபரேடிவ், ஜூனியர், ஜூனியர் பிளஸ், சீனியர் ஆகிய பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2017 முதல் 2026-ஆம் ஆண்டு வரையில் 12 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பெறும் மாத ஊதியத்தில் இருந்து தகுதிக்கு ஏற்ப ரூ.4 முதல் 6 ஆயிரம் வரையில் ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
  இந்த பேச்சுவார்த்தையில் நிர்வாகிகள் தரப்பில் எஸ்ஆர்ஓ முதன்மை பொது மேலாளர் கே.ஜி.மனோஜ்குமார், பொது மேலாளர் (நிதி) ஆர்.சுதாகரன், ஹெச்எம்எஸ் தொழிற்சங்கத் தலைவர் டி.எஸ்.இராஜாமணி,  இணைச் செயலர் ஆர்.அனந்த நாராயணன், என்டிசி மில்ஸ் ஊழியர்கள் கமிட்டி பொதுச் செயலர் பி.எம்.சுகுமாரன் ,என்டிசி சார்பில்  பொதுச் செயலர் எம்.புகழேந்தி, உதவித் தலைவர் என்.பேச்சி, தேசிய பஞ்சாலை கழகத் தொழிலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலர் எஸ்.பார்த்த சாரதி, செயலர் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.