யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சார்-ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

குடிநீர் பிரச்னைக்காக சார்-ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு செட்டிபாளையம் பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 10:26 pm

DIN

குடிநீர் பிரச்னைக்காக சார்-ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு செட்டிபாளையம் பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
பொள்ளாச்சியை அடுத்துள்ள கோலார்பட்டி-செட்டிபாளையம் கிராமத்தில் 1500- க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். அம்பராம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் இருந்து, இந்த கிராமத்துக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. ஆனால், கடந்த 20 நாள்களாகக் குடிநீர் முறையாக  விநியோகம் செய்யப்படவில்லையாம். 
இதைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் சார்-ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சார்-ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சந்திரன், பொதுமக்களிடம் பேச்சு நடத்தி குடிநீர் பிரச்னை சரிசெய்யப்படும் என தெரிவித்ததை அடுத்து கலைந்துசென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.