47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நல்லமுடி காட்சிமுனைக்குச் செல்ல 10-ஆவது நாளாகத் தடை

யானை நடமாட்டம் தொடர்ந்து இருப்பதால், நல்லமுடி காட்சிமுனைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 10:27 pm

DIN

யானை நடமாட்டம் தொடர்ந்து இருப்பதால், நல்லமுடி காட்சிமுனைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில்  யானைகள் நடமாட்டம்  தொடர்ந்து ஒரு மாதமாக அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக சுற்றுலாத் தலமான நல்லமுடி காட்சிமுனை, நீரார் அணை, சின்னக்கல்லாறு  நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்குச் செல்லக்கூடிய வழித் தடங்களில்  யானைகள் நடமாட்டம் இருப்பதால்  சுற்றுலாப் பயணிகளை அப் பகுதிக்குச் செல்ல வனத் துறையினர் அனுமதிப்பதில்லை. 
இப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் நல்லமுடி காட்சிமுனைக்குச் செல்வது வழக்கம். 
இந்நிலையில், அப் பகுதியில் யானைகள் நடமாட்டம்  தினந்தோறும் இருப்பதால், தொடர்ந்து 10-ஆவது தினமாக அப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.