கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பெண் கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

மது அருந்த பணம் தர மறுத்த பெண்ணைக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 10:46 pm

DIN

மது அருந்த பணம் தர மறுத்த பெண்ணைக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம்,  நெறிஞ்சிபாடி பகுதியைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (28). இவர் திருச்சி சாலையில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அப்போது,  உடன் பணியாற்றிய முருகேஸ்வரி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
குடிப் பழக்கத்துக்கு அடிமையான பாக்யராஜ் அடிக்கடி பணம் கேட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில்,  கடந்த 2013- இல் முருகேஸ்வரியிடம் மதுக் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
ஆனால்,  முருகேஸ்வரி பணம் கொடுக்க மறுத்ததால் அவரை பாக்யராஜ் கொலை செய்துள்ளார். பின்னர், அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், முருகேஸ்வரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து  பாக்யராஜை போலீஸார் கைது செய்தனர்.
 இந்த வழக்கு  கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், பாக்யராஜுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2,500 அபராதமும் விதித்து  நீதிபதி அல்லி (பொறுப்பு) உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.