பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 3 ஆம்னி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
தீபாவளியையொட்டி பயணிகளின் கூட்டத்தைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க கோவை வட்டாரப் போக்குவரத்துச் சரகம் சார்பில் அக்டோபர் 13 முதல் 19-ஆம் தேதி வரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
அப்போது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் இருந்து வசூலித்ததாக 3 தனியார் ஆம்னி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.