மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட வழக்குரைஞர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்குரைஞர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 6:46 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்குரைஞர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும்,  நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கோவை வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்த நிலையில், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் 200- க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தை  முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    இதுகுறித்து கோவை வழக்குரைஞர்கள் சங்கச் செயலாளர் சுதீஷ் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஏப்ரல் 7-ஆம் தேதி வரை தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளோம். 
தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளோம்.  நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
    வழக்குரைஞர்கள் ஊர்வலமாகச் சென்றபோது நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் விளம்பரப் பதாகையில் எழுதப்பட்டிருந்த ஹிந்தி எழுத்துகளை கிழித்து தங்களது எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.