கோவை மாவட்டத்தில் காளப்பட்டி கூட்டுறவு சங்கத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் ஆளுநர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, காளப்பட்டி நகர கூட்டுறவுக் கடன் சங்கத்தின் நிர்வாகிகளுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையும் (ஏப். 9), தேர்தல் புதன்கிழமையும் (ஏப்.11) நடைபெற உள்ளது.
இந்த கூட்டுறவு சங்கத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 உறுப்பினர்கள் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள வாக்காளர் பட்டியலை சில அரசியல் கட்சியினர் பெற்றுள்ளனர். அதை அவர்கள் சரிபார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். வாக்காளர் பட்டியலில் 119 வரிசை எண்ணில், வாக்காளர் பெயர் இருக்க வேண்டிய இடத்தில், கவர்னர் (ஆளுநர்) தமிழ்நாடு அரசு எனவும், தந்தை பெயர் என்ற இடத்தில் அரசு (கவர்மெண்ட்) எனவும், முகவரியில் தமிழ்நாடு எனவும் அச்சிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காளப்பட்டியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ் கூறியதாவது: கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள வாக்காளர்கள் பட்டியலை பல்வேறு போராட்டத்திற்கு பிறகே பெற்றோம். அதை ஆய்வு செய்த போது பல போலி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதில் தமிழக ஆளுநரின் பெயரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர். எனவே ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற பிற கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

கள்ளழகர் தீர்த்தவாரி வைபவ உற்சவம்!

சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.3,237! அப்போ ஒரு டீ விலை?

திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

