அஞ்சல் ஊழியர்களுக்குப் பரிசு

கோவை வடக்கு உபகோட்டத்தில் 2017-18-ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட அஞ்சல் ஊழியர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
Updated on
1 min read

கோவை வடக்கு உபகோட்டத்தில் 2017-18-ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட அஞ்சல் ஊழியர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
மேற்கு மண்டலத்தில் உள்ள 37 உபகோட்டங்களில் சேமிப்புக் கணக்குத் துவங்குதல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்ட வணிகத்தில் கோவை வடக்கு உபகோட்டம் முதலிடம் பெற்றது. 
இதில், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்ட வணிகத்தில் ரூ. 5.5 கோடி பிரீமியத் தொகையை வருவாயாக ஈட்டியுள்ளது.  புதிதாக 39,998 சேமிப்புக் கணக்குகள் துவங்கி சாதனைப் படைத்துள்ளது.  இந்நிலையில், இதில் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கான பரிளிப்பு விழா ஆர்.எஸ்.புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 
 இதில்,  கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்ட வணிகத்தில் முதலிடம் பிடித்த குப்பகோனம்புதூர் அஞ்சல் அதிகாரி நிர்மலா,  இரண்டாவது இடம்பிடித்த அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி அஞ்சல் அதிகாரி மாலா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். கிளை அஞ்சலங்களில் கோவை வடக்கு உபகோட்டத்தில் முதலிடம் பிடித்த நஞ்சுண்டாபுரம் அஞ்சல் அதிகாரி கிருபா,  வீரகேரளம் கிளை அஞ்சலக அதிகாரி அபிராமி, சோமையம்பாளையம் அஞ்சல் ஊழியர்கள் கனகராஜ் ஆகியோர் பரிசு பெற்றனர்.   மேலும்,  சிறப்பாக செயல்பட்ட  ஊழியர்கள் மற்றும் அஞ்சல் துறையில் 30 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட மெயில் ஓவர்சியர் ஆபிரகாம் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர் இவ்விழாவில்,  கோவை வடக்கு உபகோட்ட அஞ்சல் உதவிக் கண்காணிப்பாளர், கோவை கோட்ட அஞ்சல் ஊழியர் அருணாச்சலம், தேசிய விருது பெற்ற முன்னாள் அஞ்சல் ஊழியர் நா.ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com