எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கழிவுப் பஞ்சுக்கான வரியை ரத்து செய்ய கோரிக்கை

கழிவுப் பஞ்சு மீதான வரியை மாநில அரசு ரத்து செய்யவேண்டும் என்று  இந்திய நூற்பாலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:18 am

DIN

கழிவுப் பஞ்சு மீதான வரியை மாநில அரசு ரத்து செய்யவேண்டும் என்று  இந்திய நூற்பாலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய நூற்பாலை உரிமையாளர்கள் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டிபிரிவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் ஜி.சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.சோமசுந்தரம் வரவேற்றார். 
இக்கூட்டத்தில் நூற்பாலைகள் மற்றும் கழிவு பஞ்சு வியாபாரிகளின் ஒருங்கிணைப்பாளர் காட்டன் ஆர்.செந்தில் பேசியதாவது: 
வேளாண் பொருள் இல்லாத நிலையில் ஆலைகளில் உற்பத்தியாகும் கழிவுப் பஞ்சுக்கு ஒரு சதவீத வரியை மத்திய அரசுக்கு செலுத்துகின்றோம்.  ஆனாலும் மாநில அரசும் வரி வசூலிக்கிறது. இதனைத் ரத்து செய்யவேண்டும்.  
மேலும், மாதாந்திர அறிக்கை படிவம்- 9 ,  வருட கணக்கை தணிக்கை செய்தல்,  வெளி மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பஞ்சை தமிழகத்தில் விற்பனை செய்தால் இரு சதவீத வரி,  கொண்டு செல்லும் கழிவுப் பஞ்சுக்கு எடை சான்றிதழ்கள் பெறுதல்,  இருப்பு விவரம் தெரிவித்தல் போன்ற பல்வேறு பணிகளை கழிவு பஞ்சு வியாபாரிகள் செய்யவேண்டியுள்ளது. இதனைப் போக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.  உதவித் தலைவர் பி.ஆர்.சண்முகம் நன்றி கூறினார்.  இக்கூட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட  மில் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.