சந்தனமரம் வெட்டிக் கடத்தியதாக இருவர் கைது
பொள்ளாச்சி வனச் சரகத்தில் சந்தனமரங்களை வெட்டிக் கடத்தியதாக இருவரை வனத் துறையினர் கைது செய்தனர்.


பொள்ளாச்சி வனச் சரகத்தில் சந்தனமரங்களை வெட்டிக் கடத்தியதாக இருவரை வனத் துறையினர் கைது செய்தனர்.
பொள்ளாச்சி வனச் சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத் துறையினர் ரோந்து பணியில் சனிக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனர். அப்போது, சர்க்கார்பதி அருகே ஆழியாறு ஊட்டுக்கால்வாய் பகுதியில் வந்த காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில் காரில் வந்தவர்கள், கேரள மாநிலம், மன்னார்காட்டை சேர்ந்த அஸ்ரப்(47), அவரது சகோதரர் முகமது ரியாஸ் (34) என்பதும், அவர்கள் காரில் 16 கிலோ சந்தன மரங்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பும் சர்க்கார்பதி பகுதிக்கு வந்து சந்தன மரங்களை வெட்டியுள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சந்தன கட்டைகள் மற்றும் அதை அறுப்பதற்கு பயன்படுத்திய ஆயுதங்கள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...