தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

வாழும் கலை அமைப்பு சார்பில்  பஜனைப் போட்டி

கோவையில், வாழும் கலை அமைப்பு சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான ஸ்வர தரங்கினி பஜனைப் போட்டி நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

கோவையில், வாழும் கலை அமைப்பு சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான ஸ்வர தரங்கினி பஜனைப் போட்டி நடைபெற்றது.
 கோவையில், வாழும் கலை அமைப்பு சார்பில், நான்காம் ஆண்டு மாவட்ட அளவிலான குழந்தைகள் குழுக்களாக பங்கேற்று பாடல்களைப் பாடும் "ஸ்வர தரங்கினி' பஜனைப் போட்டி கோவை ஆர்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவன் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 8 முதல் 18 வயதுடைய மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் மூத்தோர் மற்றும் இளையோர் எனக் குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இளையோர் பிரிவில் 8 முதல் 12 வயதுடையோரும், மூத்தோர் பிரிவில் 13 முதல் 18 வயதுடையோரும் இடம்பெற்றனர். ஒவ்வொரு குழுவிலும் 4 முதல் 6 பேர் இடம்பெற்று இருந்தனர். 
இதில் பாரம்பரிய இசைக் கருவிகள் இசைக்கப்பட்டன. மொத்தம் 70 குழுக்களைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்றனர். மூத்தோர் மற்றும் இளையோர் பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த குழுக்களுக்கு வாழும் கலை அமைப்பின் ஆயுர்வேத பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. 
 மேலும், வாழும் கலை அமைப்பின் தன்னார்வலர்கள் பல்வேறு யோகக் கலைகளை பார்வையாளர்களுக்கு கற்றுக் கொடுத்தனர். இது தவிர, கண்கள் கட்டப்பட்ட நிலையில் பொருள்களை கண்டறியும் போட்டியும் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
 இந்தப் போட்டியில் இளையோர் பிரிவில் ஸ்ரீகாந்த், ஸ்ரீபிரியா ரவி, அபர்ணா ஸ்ரீகாந்த் ஆகியோரும், மூத்தோர் பிரிவில் உமா, ரமேஷ், ஜெயஸ்ரீ முரளி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வாழும் கலையின் பயிற்றுநர்கள் மகாலிங்கம் மற்றும் ஸ்ரீவத்சன் ஆகியோர் பற்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.