பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கைப் பேரணி

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் கிராம நிர்வாக அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை பேரணி நடத்தினர்.
பொதுமக்களுக்கு வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலமாக ஜாதி, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட 24 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது சான்றிதழ்கள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு இ சேவை மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்தச் சான்றிகழ்களை வழங்க கிராம நிர்வாக அலுவலர்கள் ஆன்லைன் முறையில் பரிந்துரை செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதற்கான செலவினங்களை வழங்க வலியுறுத்தியும் கிராம நிர்வாக அலுவலர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதையடுத்து,   பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கு ஆன்லைன் மூலம் பரிந்துரை செய்யப்படும் பணிகளை அண்மையில்  புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரவு நேரத்தில் தர்னாவில் ஈடுப்பட்டனர். இதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் மற்றும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில்,  கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் வழங்க வேண்டும். ஆன்லைன் மற்றும் கணினி வழியில் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஏற்படும் செலவினங்களை அளிக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பன கோரிக்களை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வ.உ.சி. பூங்கா வரையில் கோரிக்கைப் பேரணி நடத்தினர். சங்க நிர்வாகிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.