மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சாலை விபத்தில் பெண் சாவு

சூலூர் அருகே சாலையின் குறுக்கே நாய் சென்றதால் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் பெண் உயிரிழந்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

சூலூர் அருகே சாலையின் குறுக்கே நாய் சென்றதால் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் பெண் உயிரிழந்தார்.
 சூலூரை அடுத்த ஒண்டிப்புதூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் சூலூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் தனபாக்கியம்(30). இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில்,  இத்தம்பதி சூலூர் அருகே உள்ள பெருமாள் கோயிலுக்கு  இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
வழியில்,  திருச்சி சாலையில் உள்ள குமரன் கோட்டம் அருகே சாலையில் நாய் குறுக்கே ஓடியதால் இருசக்கர வாகனத்தில் சென்ற இந்தத் தம்பதி நிலைதடுமாறி சாலையோர மின் கம்பத்தில் மோதி கீழே விழுந்தனர். இதில், தனபாக்கியம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சண்முகசுந்தரம் சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சண்முகசுந்தரம் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற தனபாக்கியம் ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் இறந்து விட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.