மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப் பதிவு முகாம்

கோவை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த பதிவு அடையாள அட்டை
Published on

கோவை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த பதிவு அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்குவதற்கான முகாம் பெரியநாயக்கன்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கோவை வடக்கு வருவாய் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளடங்கிய கல்விப் பிரிவு ஆகியவற்றோடு இணைந்து நடத்தப்பட்ட இம்முகாமை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் தொடக்கி வைத்தார். 
முடநீக்கவியல் வல்லுநர் சுதாகர், இயன்முறை மருத்துவர் ஜெயந்தி, பேச்சுப் பயிற்சியாளர் சொர்ணபவானி, தொழில்நுட்ப உதவியாளர் ரகு, சிறப்புக் கல்வி ஆசிரியர் தேன்மொழி, ஆர்த்தி, யுவராணி உள்ளிட்டோர் முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளிடமிருந்து விவரங்களைப் பெற்று இணைய தளத்தில் பதிவு செய்தனர். 
பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், கூடலூர் கவுண்டம்பாளையம், வீரபாண்டிப் பேரூராட்சிகள், குருடம்பாளையம், நாயக்கன்பாளையம், சின்னத்தடாகம், பிளிச்சி உள்ளிட்ட 9 ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். 
வட்டார வருவாய் ஆய்வாளர் மகராஜன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் இம்முகாமுகக்கென உதவிகளைச் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com