மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூணக்கடவில் இருந்து திருமூர்த்தி அணைக்குத் தண்ணீர் திறப்பு

கோவை மாவட்டம், தூணக்கடவு அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு சனிக்கிழமை இரவு தண்ணீர் திறக்கப்பட்டது. 

News image
Updated On :9 ஜூலை 2018, 1:50 am

DIN

கோவை மாவட்டம், தூணக்கடவு அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு சனிக்கிழமை இரவு தண்ணீர் திறக்கப்பட்டது. 
பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டத்தில் (பிஏபி) திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து முதல் மண்டல பாசனத்துக்கு வழங்க வேண்டிய இரண்டரை சுற்றுத் தண்ணீரில் தற்போதுவரை ஒன்றரை சுற்றுத் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. வரும் 27ஆம் தேதியிலிருந்து முதல் மண்டலத்துக்கு ஒரு சுற்றுத் தண்ணீர் வழங்க வேண்டி  பிஏபி அதிகாரிகளிடம்  விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், வரும் 27ஆம் தேதி முதல் திருமூர்த்தி அணையிலிருந்து முதல் மண்டலத்துக்கு ஒரு சுற்று தண்ணீர் வழங்கலாம் என அதிகாரிகள் தரப்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. 
திருமூர்த்தி அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதால், மழையால் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள சோலையாறு, பரம்பிக்குளம் அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்குத் தண்ணீர் கொண்டுவந்து, திருமூர்த்தி அணை விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பரம்பிக்குளம் அணையில் இருந்து தூணக்கடவு அணைக்குத் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சர்க்கார்பதி மின்னுற்பத்தி நிலையத்தில்,  20 மெ.வா. மின்சார உற்பத்தி செய்த பின், காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு சனிக்கிழமை இரவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 800 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.