எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் விழிப்புணர்வுக் கூட்டம்

கோவையில் ப்ளோ மகளிர் அமைப்பு (ஃபிக்கி) மற்றும் தேசிய பங்குச் சந்தை சார்பில் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில்  நடைபெற்றது. 

News image
Updated On :9 ஜூலை 2018, 1:52 am

DIN

கோவையில் ப்ளோ மகளிர் அமைப்பு (ஃபிக்கி) மற்றும் தேசிய பங்குச் சந்தை சார்பில் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில்  நடைபெற்றது. 
நிகழ்ச்சியை தேசிய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பாதுகாப்பு அமைப்பின் உதவி மேலாளர் சிவபாஜம் தொடங்கிவைத்து பேசியதாவது: 
இந்தியாவில் பங்குச் சந்தையில்  மொத்தம் 1.73 கோடி பேர் முதலீடு செய்துள்ளனர்.  நாட்டின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்காக நாடு முழுவதிலும் 30 ஆயிரம் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கோவையில் மட்டும் 60 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
 கடந்த மாதம் வரை சுமார் ரூ.175 லட்சம் கோடிகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. முடிந்த அளவுக்கு தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் முதலீட்டு மையங்கள் மூலமாகவே முதலீடு செய்வது நல்லது. சில முதலீட்டு மையங்கள் இலவச சேவையை வழங்கினாலும், சில மையங்கள் தரகு கூலியை பெற்றுக் கொண்டு பணிகளை செய்கிறது.
 எதில்முதலீடு செய்வது என்றாலும்,  உங்களின் வங்கிக் கணக்கு மூலமாகவே செய்ய வேண்டும். குறைந்த அளவிலான பணத்தை முதலீடு செய்வோர், அவர்களின் பெயரிலேயே முதலீடு செய்து கொள்ளலாம் என்றார். 
இந்நிகழ்ச்சியில் கோவை கேப்பிடல் நிறுவன கிளைத் தலைவர் வீரமணி, ப்ளோ மகளிர் அமைப்பின் தலைவர் ஜெயந்தி மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.