பெற்றோரைக் கடைசிக் காலம் வரையில் வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்று பிள்ளைகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் அறிவுரை வழங்கியுள்ளார்.
கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் முதியோருக்கான சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மணி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் பேசியதாவது:
முதியோருக்கு பல்வேறு சட்ட உரிமைகள் உள்ளன. ஆனால் யாருக்கும் இது தெரிவது இல்லை. தாய், தந்தையை அவர்களது பிள்ளைகள் கடைசிக் காலம் வரையில் நன்றாகப் பராமரிக்க வேண்டும். தற்போது முதியோர் இல்லங்களில் அதிக அளவிலான முதியவர்கள் உள்ளனர். இனிவரும் காலங்களில் இந்த நிலையை மாற்ற இளம் தலைமுறையினர் முன்வரவேண்டும் என்றார்.
இதில், கோவை சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) சி.சஞ்சய்பாபா, கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன், கோவை அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், வழக்குரைஞர் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

