கோவை அருகே ஒரே வீட்டில் 3 கொம்பேறிமூக்கன் பாம்புகள் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டன.
ஒத்தக்கால்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது வீட்டின் மேற்கூரையில் பாம்பு இருப்பதாக நேதாஜி பாம்புகள் அறக்கட்டளைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த வீட்டுக்குச் சென்ற சுரேந்திரன் என்பவர் 3 அடி நீளமுள்ள 3 கொம்பேறிமூக்கன் பாம்புகளை உயிருடன் பிடித்து மதுக்கரை வனத் துறையினரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து சுரேந்திரன் கூறியதாவது: இங்கு பிடிபட்டவை கொம்பேறிமூக்கன் பாம்புகளாகும். இவை விஷமற்றவை. சுறுசுறுப்பாகவும் அதிக துடிப்புடனும் ஓடக்கூடியவை. இவை விரைவாக மரம் ஏறக்கூடியவை. இவை பிடிபட்டவுடன் கடிக்கும் தன்மை கொண்டவை. கடிபட்டவர்களுக்கு தலைச் சுற்றல் போன்ற சோர்வு இருக்கும். உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகர்கோவிலில் பிரதமர் மோடி சாலை வலம்! அம்பேத்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை!
ஏப்.19-ல் தனுஷின் கர படத்தின் முன் வெளியீட்டு விழா!

லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மீண்டும் ஹேசில்வுட்!

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

