வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

"பெற்றோரைக் கடைசி வரையில் காப்பாற்ற வேண்டும்' 

பெற்றோரைக் கடைசிக் காலம் வரையில் வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்று பிள்ளைகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் அறிவுரை வழங்கியுள்ளார். 

Updated On :9 ஜூலை 2018, 1:51 am

பெற்றோரைக் கடைசிக் காலம் வரையில் வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்று பிள்ளைகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் அறிவுரை வழங்கியுள்ளார். 
கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் முதியோருக்கான சட்ட  உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மணி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் பேசியதாவது:
முதியோருக்கு பல்வேறு சட்ட உரிமைகள் உள்ளன.  ஆனால் யாருக்கும் இது தெரிவது இல்லை. தாய், தந்தையை அவர்களது பிள்ளைகள் கடைசிக் காலம் வரையில் நன்றாகப் பராமரிக்க வேண்டும்.  தற்போது முதியோர் இல்லங்களில் அதிக அளவிலான முதியவர்கள் உள்ளனர். இனிவரும் காலங்களில் இந்த நிலையை மாற்ற இளம் தலைமுறையினர் முன்வரவேண்டும் என்றார். 
 இதில்,  கோவை சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும்,  முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) சி.சஞ்சய்பாபா, கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன், கோவை அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், வழக்குரைஞர் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.