விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஆசிரியர்களைப் போலவே கலந்தாய்வு நடத்தக் கோரிக்கை

ஆசிரியர்களுக்கு நடத்தப்படுவதைப் போலவே பள்ளிக் கல்வித் துறை அலுவலகப் பணியாளர்களுக்கும் இணையவழி பொது  கலந்தாய்வு நடத்த வேண்டும்

Updated On :23 ஜூலை 2018, 7:43 am IST

ஆசிரியர்களுக்கு நடத்தப்படுவதைப் போலவே பள்ளிக் கல்வித் துறை அலுவலகப் பணியாளர்களுக்கும் இணையவழி பொது  கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிக் கல்வித் துறையில் அலுவலகப் பணியாளர்களும் ஒரு அங்கம். அரசால் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் கடைக்கோடி பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் கொண்டு சேர்க்கும் பணியை நாங்கள்  செய்து வருகிறோம். இதன் மூலம் அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு துணையாக இருக்கிறோம்.
பள்ளிக் கல்வித் துறைப் பணியாளர்களுக்கு ஒளிவு மறைவற்ற வெளிப்படையான கலந்தாய்வு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே, ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வை இணைய வழியில் நடத்தியதைப் போன்று எங்களுக்கும் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
அண்மையில் கோவைக்கு வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் த.ல.சீனிவாசன், மாநில உயர்நிலைக்  குழுத் தலைவர் எம்.வி.பால்ராஜ் ஆகியோரின் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.மனோகர், கோவை மாவட்ட பொருளாளர் என்.ஜனார்த்தனன், துணைத் தலைவர் க.யோகசந்தர், கல்வி மாவட்டத் தலைவர் வி.எஸ்.சபாபதி, துணைத் தலைவர் எஸ்.ராஜன், இணைச் செயலர் செ.சு.சரவணகுமார் ஆகியோர் இந்த கோரிக்கை குறித்து அமைச்சரிடம் வலியுறுத்தியிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.