கோவை பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியும், ப்ளோ மகளிர் அமைப்பும் இணைந்து மகளிருக்கான 25 நாள்கள் சுயதொழில் பயிற்சியை அளிக்க உள்ளனர்.
பி.டெக் அல்லது இளம் அறிவியலில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள், பட்டயப் படிப்பை முடித்தவர்கள், 18 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட பெண்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம்.
புதிதாக சுயதொழில் தொடங்குவது, ஏற்கெனவே இருக்கும் தொழில்களை மேம்படுத்துவது முதலீட்டை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.
இதற்கான செலவை ஆமதாபாத்தில் உள்ள தேசிய அறிவியல், தொழில்நுட்ப மேம்பாட்டுத் துறை ஏற்றுக் கொள்கிறது.
பயிற்சி ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பதிவுக் கட்டணம் ரூ.1,000. மொத்தம் 25 இடங்கள் மட்டுமே உள்ளன.
இது தொடர்பான விவரங்களுக்கு PSGEDC@GMAIL.COM என்ற இ-மெயில் முகவரியிலோ, 93631- 04733, 88385 47353 என்ற செல்லிடப்பேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று பி.எஸ்.ஜி. நிறுவனம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!
நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
ரஜினிகாந்த் 173 படத்தின் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சால்மன் மீனின் வாழ்க்கை சுழற்சியும் வலசை பயணமும்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


