மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

லாரிகள் வேலை நிறுத்தம்: வால்பாறையில் பொருள்களின் விலை உயர வாய்ப்பு

லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் வால்பாறையில் காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது.

Updated On :23 ஜூலை 2018, 7:41 am IST

லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் வால்பாறையில் காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
வால்பாறைக்கு காய்கறி, மளிகை, பால் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் பொள்ளாச்சியில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.  இதில் காய்கறிகள் அனைத்து நாள்களிலும் கொண்டு வரப்படுகிறது. 
இந்நிலையில்,  லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, பொருள்களை கடந்த இரு தினங்களாக மினி லாரிகள் மூலம் கொண்டு வருகின்றனர். இதனால் சில காய்கறிகளுக்குத்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் தொடர்ந்து நீடித்தால், பொருள்களின் வரத்து குறைந்து விலைகள் உயர வாய்ப்புள்ளது. 
லாரி வேலை நிறுத்தத்தினால் தேயிலைத் தூள் கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்படவில்லை. கனமழை காரணமாக தேயிலை உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தொழிற்சாலைகளில் தூள் உற்பத்தியும்
 குறைந்து காணப்படுகிறது. சில எஸ்டேட் நிர்வாகத்தினர் தேயிலைத் தூளை தங்கள் சொந்த லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.