தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

கல்விக் கட்டணம் செலுத்தாததால் மாணவர் வெளியேற்றம்: மாநகராட்சிப் பள்ளியில் சேர்க்க மறுப்பதாக மனு

கல்விக் கட்டணம் செலுத்து முடியாததால் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து தனியார் பள்ளி நிர்வாகம் வெளியேற்றிய நிலையில்

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

கல்விக் கட்டணம் செலுத்து முடியாததால் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து தனியார் பள்ளி நிர்வாகம் வெளியேற்றிய நிலையில் மாநகராட்சிப் பள்ளியில் சேர்க்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட மாணவர் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். 
 இதுகுறித்து, கோவை கோகுலம் காலனி, இந்திரா நகரைச் சேர்ந்த சசிகுமார் மகன் தீபக் அளித்துள்ள புகார் மனு விவரம்:
 கோவை, முல்லை நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்தேன். எங்களால் நடப்பு ஆண்டு கல்விக் கட்டணத்தை மொத்தமாகச் செலுத்த முடியவில்லை. ஆனால், கல்விக் கட்டணத்தைப் பிரித்து மாதந்தோறும் செலுத்துவதாக பள்ளி நிர்வாகத்திடம் எனது தந்தை கூறினார். அதை ஏற்க மறுத்த பள்ளி நிர்வாகம் எனக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றினர். இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைச் சந்தித்து பி.என்.புதூரில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் சேர்ந்து 10 ஆம் வகுப்பு பயில அனுமதி கேட்டோம். 
 ஆனால், மாநகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியர் என்னை பள்ளியில் சேர்க்க மறுத்துவிட்டார். எனவே, என்னை கட்டாயப்படுத்தி வெளியேற்றிய தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மாநகாரட்சிப் பள்ளியில் சேர்ந்து 10 ஆம் வகுப்பைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க நகைப் பூங்கா அமைக்க வேண்டும்
கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க நகைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்குப் பின்னர் இத்தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. இதனால், தொழிலாளர்கள் பலர் வறுமையில் உள்ளனர்.
 எனவே தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசு மானியத்துடன் தங்க நகைத் தொழில் பூங்கா அமைக்கவேண்டும். அதே நேரத்தில் மிகப் பெரிய நகைக் கடை உரிமையாளர்கள் தாங்களாகவே கோவையில் தங்க நகைப் பூங்கா அமைப்பதற்காக பணம் வசூல் செய்து வருகின்றனர். 
 எனவே, சிட்கோ மேலாளர் மூலமாக நகைக் கடை உரிமையாளர்கள் தொடங்குவதாகக் கூறி வரும் தங்க நகைத் தொழில் பூங்காவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அனைத்து தங்க நகைத் தொழிற் சங்கக் கூட்டமைப்பு சார்பில் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை அகற்ற வேண்டும்
கேவை, பீளமேடு, இளங்கோ நகர் பகுதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள், பூச்சிகள் அதிகரித்து, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது. எனவே, குப்பைகளை அகற்ற மாநகாரட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி (வடக்கு) இளைஞரணித் தலைவர் கார்த்திக் கண்ணன் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.
 கரூர் - கோவை புறவழிச் சாலை 
திட்டத்தைக் கைவிட வேண்டும்
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக கரூர் முதல் கோவை வரையில் பசுமை வழித் திட்டச் சாலை அமைக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டம் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை.
 கார்ப்பரேட் நிறுவனங்கள் சுண்ணாம்புக் கல் சுரங்கப் பயன்பாட்டுக்காக இந்தத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக விவசாய நிலங்கள், வீடுகள், கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளை இழந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 
 பசுமை வழித் திட்டச் சாலை அமையப் போகும் நிலங்களின் வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக குறைந்த விலையில் நிலத்தைக் கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்தத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.