ஜெயலலிதா பேனர் கிழிப்பு: அதிமுகவினர் சாலை மறியல்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி வைக்கப்பட்டிருந்த பேனரை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதைக் கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி வைக்கப்பட்டிருந்த பேனரை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதைக் கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி கோவையின் பல்வேறு பகுதிகளில் அவரது உருவம் பொறித்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கோவை ராஜவீதி தேர்நிலைத் திடலில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஜெயலலிதாவின் உருவப் படத்தை மர்ம நபர்கள் பிளேடால் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து தகவல் பரவியதும் அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். வெரைட்டிஹால் சாலை காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...